இட ஒதுக்கீட்டிற்கான ஒப்புதல் வரும் வரை கலத்தாய்வை ஒத்தி வைப்பதில் தவறில்லை: சாமிநாதன் பேட்டி

1 December 2020, 6:24 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கான ஒப்புதல் வரும் வரை கலத்தாய்வை ஒத்தி வைப்பதில் தவறில்லை என பாஜக மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன், புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை கேட்டு பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அரசின் நிர்வாகயின்மையால் பல அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட கூடிய அனைத்து தரப்பினருக்கும் ஆதரவாக பாஜக சார்பில் வரும் 4ம் தேதி முதல் 3 நாள் தொடர் தர்ணா நடைபெற உள்ளதாக தெரிவித்த சாமிநாதன்,

தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் பாஜக அதிமுக கூட்டணி தொடரும் என்றும் கூட்டணி குறித்த இறுதி அறிவிப்பை பாஜக தலைமை விரைவில் அறிவிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான ஒப்புதல் வரும் கலத்தாய்வை நிறுத்தி வைக்கலாம் என்றும் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Views: - 14

0

0