நாடக கலைஞர்கள் சங்கரதாஸ் சுவாமிகளின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி

13 November 2020, 6:58 pm
Quick Share

புதுச்சேரி: நாடகத்தந்தை எனப்போற்றபடும் சங்கரதாஸ் சுவாமிகளின் 98-ம் ஆண்டு நினைவுநாள் புதுச்சேரி அரசு சார்பில் கருவடிக்குப்பத்தில் உள்ள சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. நாடக கலைஞர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் நாடக வரலாற்றுக்குப் புத்துயிர் தந்தவர் தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் நாடக உலகின் தனிப்பெரும் தகைமையர்களாக விளங்கிய சிலருள் குறிப்பிடத்தக்கவர். கூத்து மரபிலிருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடக அரங்கம், பெட்டி அரங்க மரபிற்கேற்ப உருபெற்றது சங்கரதாஸ் சுவாமிகள் காலத்தில்தான். தமிழ் நாடகத் தலைமையாசிரியரான இவரை நாடகத்தந்தை என்று கலைஞர்களால் அழைக்கப்படுகின்றனர்.

இவரது 98-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று புதுச்சேரி அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது. புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் புதுச்சேரி ஏராளமான கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த நாடகம் மற்றும் கூத்து கலைஞர்கள் பல்வேறு இசை வாத்தியங்களுடன் ஆடிப்பாடி ஊர்வலமாக வந்து சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

Views: - 16

0

0