சேலத்திற்கு காரில் கடத்த முயன்ற போதை பொருட்கள்: சினிமா பாணியில் காரை துரத்திப் பிடித்த போலீசார்

10 April 2021, 9:24 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சேலத்திற்கு காரில் கடத்த முயன்ற ஒரு லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை கிருஷ்ணகிரி போலீசார் சினிமா பாணியில் காரை துரத்திப் பிடித்து இருவரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி நகர காவல்நிலைய போலீசார் புதுப்பேட்டை 5-ரோடு ரவுண்டானா பகுதியில் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மாருதி ஈகோ வாகனம் இவர்களைப் பார்த்ததும் திடீரென காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர். சந்தேகமடைந்த காவல்துறையினர் தங்களது வாகனத்தில் காரை துரத்தி உள்ளனர். வாகனம் கிருஷ்ணகிரிசேலம் சாலையில்ஆவின் ஒன்றியம்பகுதியில் காரை மடக்கிப் பிடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து
சோதனை செய்ததில், கார் முழுவதும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வாகனத்தை ஓட்டி வந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணைசெய்ததில்,

கர்நாடக மாநிலம் சர்ஜபுரம் பகுதியைச் சேர்ந்த கண்பத்ராம், ராஜஸ்தான் மாநிலம் ஓஜாராம் கிராமத்தைச் சார்ந்த சாட்பலராம் ஆகிய இருவர் என தெரியவந்தது. அவர்களை விசாரரித்ததில் பெங்களுரிலிருந்து சேலத்திற்க்கு இவற்றை கடத்த முயன்றதாக தெரிவித்தனர்.போதைப் பொருட்கள் கடத்தி வந்த இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான மாருதி இகோகார் மற்றும் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கர் கைப்பற்றி இருவர் மீதும்மேல் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் கிருஷ்ணகிரி நகரில் உள்ள வடமாநிலத்தை சேர்ந்த மொத்த பொருள் விற்பனை அங்காடி கடைக்கு விநியோகம் செய்ய வாகனத்தில் போதை பொருள் கடத்தி வரப்பட்டதா என்று கோனத்தில்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 24

0

0