ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட பூ கடைகள்… அதிகாரிகளின் நடவடிக்கை என்ன..??

2 August 2020, 1:40 pm
Quick Share

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி முக கவசம் மற்றும் சமுக இடைவெளி பின்பற்றாமல் பூ வியாபாரம் நடைபெற்றது கொரோனா நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் உருவாகி வருகிறது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கடந்த வாரத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் புதிய பேருந்து நிலையம் எதிரில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வியாபாரம் செய்வது வழக்கம். இன்று ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தளர்வுற்ற ஊரடங்கு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,

இந்த ஊரடங்கு விதியை சற்றும் பின்பற்றாமல் பூ மார்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கூடி முறையாக முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் பூ வியாபாரத்தில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து அதிக நபர்கள் பூ வியாபாரம் செய்ய இங்கு வருவதால் அருப்புக்கோட்டையில் கொரோன வைரஸ் தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளது.

Views: - 9

0

0