ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி

Author: Udayaraman
25 July 2021, 9:04 pm
Oppostion Party Leader EPS - Updatenews360
Quick Share

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவையில் இருந்து இன்று இரவு விமானம் மூலம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். எடப்பாடி பழனிசாமியுடன் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் டெல்லி செல்கின்றனர்.பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்றுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி செல்கிறார். ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை நாளை காலை சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின் போது தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள், உள்ளாட்சி தேர்தல், அரசியல் சூழ்நிலை குறித்து பேச வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Views: - 84

0

0