அரசு பேருந்து மீது ஈச்சர் லாரி மோதி விபத்து: 3 பேர் படுகாயம்

Author: kavin kumar
13 August 2021, 8:31 pm
Quick Share

தருமபுரி: பென்னாகரம் அருகே அரசு பேருந்து மீது ஈச்சர் லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த 3 பேரை மீட்டு ஆம்புலன் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தருமபுரி நகரப் பேருந்து நிலையத்திலிருந்து நெற்குந்தி கிராமத்திற்கு அரசு நகர பேருந்து தருமபுரி அடுத்த பென்னாகரம் மேம்பாலம் வழியாக சென்றுகொண்டிருந்தது. அப்போது சேலத்திலிருந்து இரும்பு சாக்கரத்தை ஏற்றிக்கொண்டு வந்த ஈச்சர்லாரி மேம்பாலத்திலிருந்து இறங்கி வேகமாக வந்து பேருந்தின் மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு கை துண்டானது. மேலும் படுகாயத்துடன் இருந்த நடத்துனர். உள்ளிட்ட 3 பேரை மீட்டு ஆம்புலன் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் குழந்தை உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்டோர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தருமபுரி நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி தப்பி ஓடிய ஈச்சர் லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Views: - 178

0

0