ஆதரவின்றி சுற்றி திரிந்த முதியவர் தூக்கிட்டு தற்கொலை

23 October 2020, 3:36 pm
Quick Share

காஞ்சிபுரம்: மணிமங்கலம் அருகே ஆதரவின்றி சுற்றி திரிந்த முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆல்பர்ட்ராஜ் (75). இவருக்கு யாபேஷ் என்கிற மகனும் மூன்று மகள்களும் உள்ளனர். கடந்த 8 வருடங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் ஆல்பர்ட் ராஜிக்கு சொந்தமான வீட்டை மகன் யாபேஷ் ஏமாற்றி விற்று விட்டு பணத்துடன் வெளியூர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆதரவின்றி கிடந்த ஆல்பர்ட் ராஜ் படப்பையில் உள்ள இளைய மகள் கெர்சி உடன் வாழ்ந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மன உளைச்சலுக்கு உள்ளானதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கெர்சியின் வீட்டை விட்டு வெளியேறி சென்னை நகர் பகுதிகளில் சுற்றித் வந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே அவுட்டர் ரிங் ரோடு சர்வீஸ் சாலைக்கு அருகாமையில் உள்ள மரத்தில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் ஆல்பர்ட் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 16

0

0