முதியவர் தலை மீது கல்லை போட்டு எரித்துக் கொலை: வாலிபர் கைது

Author: Udhayakumar Raman
22 July 2021, 5:58 pm
Quick Share

ஈரோடு: ஈரோட்டில் முதியவர் தலை மீது கல்லை போட்டு எரித்துக் கொலை செய்த வழக்கில் வாலிபர் ஒருவரை கைது செய்தனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் நஞ்சப்பா நகர் காவிரி கரையில் உள்ள மயானத்தில் நேற்று மனநலம் பாதிக்கப்பட்ட 52 வயதான முதியவர் அசேன் சேட்டு என்பவரை மர்ம ஆசாமிகள் தலையில் கல்லை தூக்கிபோட்டும், எரித்தும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இக்கொலை சம்பவம் தொடர்பாக கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தார். இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக ஈரோடு ஆர்.என்.புதூர், அமராவதிநகரை சேர்ந்த கந்தசாமி மகன் பிரகாஷ் என்ற வாலிபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரகாசிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில்,

பிரகாஷ் ஈரோட்டில் பழைய இரும்பு கடையில் லோடுமேனாக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலை செய்து கொண்டிருந்த பிரகாசின் முகத்தில் எச்சில் துப்பியதால் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நஞ்சப்பா நகரில் நடந்து சென்று கொண்டிருந்த அசேன்சேட்டுக்கும், பிரகாஷ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ் அசேன்சேட்டு தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். அடையாளம் தெரியாமல் இருக்க அவரது உடலை துணிகளை கொண்டு எரித்தது தெரிய வந்தது.

Views: - 188

0

0