தமிழக – கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

28 February 2021, 5:02 pm
Quick Share

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே தமிழக – கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டுள்ளனார்.

நடைபெற இருக்கின்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் விதத்தில் பறக்கும் படை அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பண்ணாரி, ஆசனூர், புளிஞ்சூர் ஆகிய இடங்களில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், காவல்துறை துணை ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட பறக்கும் படையினர் இன்று காலை முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக கர்நாடகத்திலிருந்து வரும் கர்நாடக பதிவெண்கள் கொண்ட இருசக்கர, நான்கு சக்கர மற்றும் பேருந்துகளை நிறுத்தி வாகனங்களில் பயணிப்போர் மற்றும் அவர்கள் கொண்டு வரும் பைகளை சோதனையிட்டு அனுப்பி வருகின்றனர். சென்ற சட்டமன்றத் தேர்தலில் போது கர்நாடகத்தில் இருந்து வந்த வாகனங்களில் மட்டும் 5 கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கர்நாடக பதிவெண்கள் கொண்ட அனைத்து வாகனங்களும் இன்று காலை முதல் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

Views: - 2

0

0