புதுச்சேரியில் நடைபெற்று வரும் பிரெஞ்சு கவுன்சிலர்களுக்கான தேர்தல்

Author: kavin kumar
7 November 2021, 3:29 pm
Quick Share

புதுச்சேரி:புதுச்சேரியில் பிரெஞ்சு கவுன்சிலர்களுக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வெளிநாடு வாழ் பிரெஞ்ச் குடிமக்களுக்காக, பிரெஞ்ச் குடிமக்கள் சபையை பிரான்ஸ் நாடு ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நடைபெறும் உள்ளாட்சி போன்ற அமைப்பு தான் இது. அந்தந்த நாடுகளில் உள்ள பிரெஞ்ச் துணைதூதரகங்கள் தேர்தல் நடத்தி, இந்த சபைக்கான பிரெஞ்ச் கவுன்சிலர்களை, தேர்வு செய்கின்றன. இவர்களின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகளாகும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள், பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்களின் குறைகளை நேரடியாக பிரெஞ்ச் துணை துாதரகத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண முயல்வார்கள், இந்தியாவில், பிரெஞ்ச் கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க வசதியாக வட மாநிலங்கள், தென் மாநிலங்கள் என இரண்டு தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வட மாநில தொகுதியில் நான்கு கவுன் சிலர்களும், தென் மாநில தொகுதியில் மூன்று கவுன்சிலர்களும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இவ்விரு தொகுதிகளுக்கு, கடைசியாக 2014ல் கவுன்சிலர் தேர்தல் நடந்தது. இவர்களின் பதவிக் காலம் 2020ல் முடிந்ததையொட்டி அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும், கவுன்சிலர் தேர்தல் கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்திய தொகுதியில் மே மாதம், கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால், தேர்தல் நடக்கவில்லை.
இந்நிலையில் இந்திய பிரெஞ்ச் கவுன்சிலர் தேர்தல், இன்று நடைபெற்று வலுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 00 மணி வரை இத்தேர்தல் நடைபெறுகிறது. முடிவுகள் வெளியாகும் அனைத்தும் இன்றைய தினமே வெளியிடப்படும் இந்த தேர்தலில் பிரெஞ்ச் குடியுரிமை பெற்ற 4,600 பேர் ஓட்டளிக்கும் தகுதியை பெற்றுள்ளனர். புதுச்சேரியில் உள்ள பிரெஞ்ச் தூதரகத்தில் காலை முதல் வரிசையில் நின்று வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

Views: - 259

0

0