வாகனங்களை வழிமறிக்கும் காட்டுயானைகள்: வாகன ஓட்டிகள் கவனமுடன் இயக்க அறிவுரை

8 February 2021, 3:53 pm
Quick Share

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கோவை சாலையில் குட்டியுடன் சாலையில் கெத்தை அருகே உலாவரும் காட்டுயானைகள் வாகனங்களை வழிமறிப்பதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் இயக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் முதல் கோவை செல்லும் ஐம்பது கிலோ மீட்டர் சாலை கெத்தை வனப்பகுதியை கடந்து செல்லும் சாலையாக உள்ளது. அடர்ந்த வனப்பகுதிகளை கொண்ட இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, உள்ளிட்ட வன விலங்குகள் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதியின் ஊடாக நாற்பத்தி எட்டு கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலை பாதையாக உள்ளது. கேரளா, கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிகளவில் வாகனங்கள் வந்து செலகின்றன.

இந்த நிலையில் மஞ்சூர், கோவை சாலையில் கெத்தை அருகே இரு தினங்களாக குட்டியுடன் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. அவ்வழியாக வரும் வாகனங்களை காட்டுயானைகள் வழிமறித்ததால் வாகன ஒட்டிகள் அச்சம் அடைந்தனர். பின்னர் சிறிது நேரம் நின்ற காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் சென்றதால் நிம்மதியடைந்தனர். காட்டுயானைகள் குட்டியுடன் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் இயக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Views: - 0

0

0