ஈமு கோழி மோசடி வழக்கு: 2 குற்றவாளிகளுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை…கோவை நீதிமன்றம் அதிரடி!!

Author: Aarthi Sivakumar
23 September 2021, 7:09 pm
Quick Share

கோவை: இருவேறு ஈமு கோழி மோசடி வழக்குகளில் ஈடுபட்ட இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த குமார், திருப்பூரை சேர்ந்த கார்த்திகேயன் (51) ஆகியோருக்கு இருவேறு ஈமுக்கோழி மோசடி வழக்குகளில் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.82 லட்சம் அபராதம் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த தண்ணீர்பந்தம்பட்டியில் ஓம் சக்தி ஈமு பார்ம்ஸ் என்ற நிறுவனம் சார்பில் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்தால், 6 முதல் 20 ஈமுகோழிக்குஞ்சுகளை அளித்து, அதற்கான தீவனம், கொட்டகை அமைத்து கொடுப்பதுடன், செய்யும் முதலீட்டைப் பொருத்து 24 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை மாதம்தோறும் ரூ.6 ஆயிரம் ரூ.10 ஆயிரம் வரை ஊக்கத்தொகை, ஆண்டுதோறும் போனஸாக ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை அளிக்கப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஈமு கோழிக்குஞ்சுகளை தாங்களே வளர்த்து மாதந்தோறும் ஊக்கத்தொகை, ஆண்டு போனஸ் ஆகியவற்றை அளிக்கப்படும் என்று இரண்டு கவர்ச்சிகர திட்டங்களை விளம்பரப்படுத்தி மோசடியில் ஈடுபட்டனர்.

இரு வழக்குகளிலும், 41 முதலீட்டாளர்களிடம் ரூ.82.34 லட்சம் மோசடி செய்ததாக கடந்த 2012 ல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Views: - 160

0

0