பொறியாளரின் வீட்டை உடைத்து கொள்ளை : தூத்துகுடியைச்சேர்ந்த இளைஞர் கைது

Author: kavin kumar
27 January 2022, 11:08 pm
Quick Share

கோவை : கோவையில் பொறியாளரின் வீட்டை உடைத்து 29 சவரன் நகை கொள்ளையடிக்கபட்ட சம்பவத்தில் தூத்துகுடியைச்சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை ஒண்டிப்புத்தூர் பகுதியில் வசித்து வருபவர் பொறியாளர் சையது இப்ராகிம். கடந்த இரு வாரங்களுக்குமுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தனது மாமானரிடம் நலம் விசாரிக்க குன்னூர் சென்றுள்ளார். பத்து நாட்களுக்கு பிறகு கடந்த 24-ம் தேதி,சையது இப்ராகிம் வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்து. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சையது இப்ராகிம் வீட்டினுள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 29 சவரன் நகைகள் மற்றும் 10 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கபட்டிருந்தது. இதுகுறித்த தகவிலன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிங்காநல்லூர் போலீசார் தடயங்களை சேகரித்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததால் சையது இப்ராகிம் வீட்டிற்கு அருகில் தங்கி கூலி வேலை செய்து வந்த தூத்துகுடியை சேர்ந்த சுடலை கண்ணு என்ற வாலிபர் இரும்பு கம்பியுடன் சுற்றி திருந்தது சிசிடிவியில் பதிவாகி இருந்தது. மேலும் கடந்த சில நாட்களாக சுடலை கண்ணு மாயமாகியிருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் வாலிபரை போலீசார் தேடி வந்ததனர். இந்த நிலையில் கோவை எல்.என்.டி சாலை அருகே சுற்றி திருந்த சுடலை கண்ணுவை பிடித்து விசாரத்தபோது, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெஉரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அந்த வாலிபரை கைது செய்த போலீசார், 20 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.மேலும. கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

Views: - 1232

0

0