புதுச்சேரியில் நமச்சிவாயத்திற்கு உற்சாக வரவேற்பு

29 January 2021, 10:14 pm
Quick Share

புதுச்சேரி: பாஜகவில் இணைந்துள்ள புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்திற்கு மாநில எல்லையில் 2000க்கும் மேற்பட்டோர் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் நமச்சிவாயம், இவர் அரசின் மீது இருந்த அதிர்ப்பின் காரணமாக கடந்த திங்கட்கிழமை தனது அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார், இந்நிலையில் நேற்று டெல்லி சென்று பாரதிய ஜனதா கட்சி பொதுச்செயலாளர் அருண்சிங் தலைமையில் கட்சியில் இணைந்தார், தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்ற அவர் இன்று புதுச்சேரி திரும்பினார்,

இந்நிலையில் புதுச்சேரி மாநில எல்லையில் அவருக்கு மாநில பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது, கனகசெட்டிகுளமெ பகுதியில் 2000க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள், பாஜக தொண்டர்கள் கூடி பட்டாசு வெடித்து, மேள தாளத்துடன் மாலை அணிவித்து அவரை வரவேற்றனர். அவரை வரவேற்க ஏராளமானோர் கூடியதால் புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லக்கூடிய கிழக்கு கடற்கரை சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Views: - 16

0

0