தொழிலதிபர் கடன் பிரச்சனையால் மண்ணெ்ய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

11 January 2021, 6:21 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவகாசியை சேர்ந்த தொழிலதிபர் கடன் பிரச்சனையால் மண்ணெ்ய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சிவகாசியில் சேர்ந்தவர் கணேசன். இவர் அப்பகுதியில் பிரிண்டிங் தொழில் நடத்தி வந்துள்ளார். பிரிண்டிங் தொழில் நடத்துவதற்கு சிவகாசியை சேர்ந்த தனியார் நிதி நிறுவன மற்றும் 10க்கும் மேற்பட்ட நபர்களிடம் கடன் பெற்றுள்ளார். அந்த கடனை வட்டியும் மாதந்தோறும் திரும்ப செலுத்தி வந்துள்ளார். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் இவருக்கு கொரோன தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து கடன் தொகை வட்டி மேல் வட்டி அதிகரித்தால் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் தவித்து வந்துள்ளார்.

இதை அடுத்து கடன் கொடுத்தவர்கள் தன்னையும் தன் மனைவியையும் அடியாட்கள் வைத்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும், கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் வேண்டும் என தன் மனைவி மற்றும் மகனுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த நபர் திடீரென தன் கையில் இருந்த மண்ணெய்யை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதை அடுத்து அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

Views: - 37

0

0