கோவையில் சமூக வலுவூட்டல் முகாம்: மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.73 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டது..!!

Author: Rajesh
24 ஜனவரி 2022, 5:09 மணி
Quick Share

கோவை: குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற சமூக வலுவூட்டல் முகாமில் 73 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

கோவை குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் சமூக நீதி அமைச்சகம் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத் துறை சார்பில், சமூக வலுவூட்டல் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் சமீரன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு 88 மாற்றுத்திறனாளிகளுக்கு 73 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கினர்.

இதில் காதுகேளாதோருக்கான கருவிகள், கேமிங் கிட், மாற்றுத்திறனாளிகளிக்கான மூன்று சக்கர வாகனம், ஆகியவை வழங்கப்பட்டன. இதில் சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் அட்டை வழங்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக கருத்தரங்குகளும் விழிப்புணர்வு முகாம்களும் மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்பட வேண்டும். மத்திய அரசாங்கம் அதற்கு உண்டான சலுகைகளை மானியங்களை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றது.

கொரோனா தாக்கம் குறைந்த பின்பு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் குறைந்தது இரண்டு இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உண்டான விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும் குறைந்தது 1000 மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த பலன் சென்றடைவதற்கு உண்டான முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும். மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்காக தனியாக பல்வேறு திட்டங்களை அரசாங்கம் வைத்திருக்கின்றது.

மாற்றுத்திறனாளி அடையாள அட்டை இருக்க கூடிய மாணவர்களுக்கு ஒன்றிலிருந்து ஆறாம் வகுப்பு வரை மாதம் ஆயிரம் ரூபாயும், ஆறிலிருந்து ஒன்பதாவது வகுப்பு மாணவர்களுக்கு மாதம் 2,000 ரூபாயும், ஒன்பதிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் 3ஆம் ரூபாயும் வழங்கப்படுகிறது. நம் ஊர்களில் பல மாற்றுத்திறனாளி மாணவர்கள் அடையாள அட்டை பெறாமல் உள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க கடன் உதவியும் வழங்கப்படுகின்றது. எனவே கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் விழிப்புணர்வு முகாம்கள் மூலம் 1000 மாற்றுத்திறனாளிகளுக்கு நாம் இந்த பலனை எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்தார்.

  • TVK Vijay விஜய் கட்சியில் இணையும் முன்னாள் ஐஏஎஸ்? புதிய சர்கார் அமைக்குமா தமிழக வெற்றிக் கழகம்?!
  • Views: - 4353

    0

    0