திமுக ஆட்சிக்கு வந்ததும் பால் விலை குறைக்கப்படும்: திமுக வேட்பாளர் கே.எஸ்.சரவணகுமார் வாக்குறுதி

Author: Udhayakumar Raman
24 March 2021, 2:31 pm
Quick Share

தேனி: பெரியகுளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.எஸ்.சரவணகுமார் பழைய பேருந்து நிலைம் பகுதியில் உள்ள டீக்கடைகளில் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் பொதுமக்களிடம் பால் விலை குறைக்கப்படும் என வாக்குறுதி கொடுத்து வாக்கு சேகரித்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.எஸ்.சரவணகுமார் இன்று பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடம் பேசிய அவர், ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததும் பெரியகுளம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் தரமான தார் சாலைகள் அமைத்து பொது மக்களின் நீண்ட நாள் பாதாள சாக்கடை வசதிகள் அமைத்து தருவேன் எனக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து அருகே உள்ள டீக்கடை களுக்கு சென்ற சரவணகுமார் டீ கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் பொதுமக்களை சந்தித்தார்.

அப்போது அவர்களுடன் டீ சாப்பிட்டுவிட்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும், தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமையும் பால் விலை உற்பத்தியாளர்கள் பாதிக்காதவாரு கணிசமாக குறைக்கப்படும் என உறுதியளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த வாக்கு சேகரிப்பின் போது திமுக கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர்களும் உடனிருந்தனர். திமுக வேட்பாளர் சரவணகுமார் காலை நேரங்களில் நடந்தே சென்று பொதுமக்களை சந்திப்பதும், டீ கடைகள், வணிக நிறுவனங்களுக்கு சென்று பொது மக்களின் தேவை அறிந்து அதற்கு ஏற்ப வாக்குறுதிகளை வழங்கி வருகின்றார். நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளை மட்டுமே மக்களிடம் வழங்கிவருவதாக சரவணகுமார் மக்களிடம் கூறினார்.

Views: - 60

0

0