வராகநதி ஆறு மற்றும் மஞ்சளாறு நீர்வரத்து அதிகரிப்பு: ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

18 July 2021, 6:23 pm
Quick Share

தேனி: பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரியகுளம் வராகநதி ஆறு மற்றும் மஞ்சளாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு நீர் வரத்து அதிகரிக்கும் நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையானது அதன் முழு கொள்ளவான 126.28 அடியை கடந்த மே மாதம் 4ஆம் தேதி எட்டியது. இதனை தொடர்ந்து அணைக்கு வரும் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில்கடந்த 75 நாட்களாக அணையின் நீர் மட்டம் 126.28 அடியாக உள்ளது. இதே போல் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணை அதன் முழு கொள்ளவான 57 அடியில் 55 அடியை கடந்த மாதம் 4ஆம் தேதி எட்டிய நிலையில் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் மஞ்சளார் அணையும் கடந்த 50 நாட்களாக அதன் முழு கொள்ளவுடன் இருந்து வருகின்றது. இந்நிலையில் சோத்துபாறை அணை மற்றும் மஞ்சளார் அணை கடந்த 50 நாட்களுக்கு மேலாக அதன் முழு கொள்ளவுடன் இருந்து வரும் நிலையில்,

நேற்று மாலை முதல் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் நிலை உள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் நீர் வரத்து குறித்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், அணையின் நீர் வரத்து அதிகரிக்கும் நிலையில் பெரியகுளம் வராகநதி ஆறு மற்றும் மஞ்சளார் அற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து அணையில் நீர் திறக்கும் நிலை உள்ளதால் ஆற்றங்கரையோர மக்கள் ஆற்றில் குளிக்கவோ கடக்கவோ வேண்டாம் என பெரியகுளம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 98

0

0