9 பவுன் நகை கொள்ளையடித்த இருவர் கைது…
22 August 2020, 5:24 pmஈரோடு: கோபிச்செட்டிப்பாளையம் அருகே போதை பொருள் சோதனை செய்ய வந்ததாக கூறி 9 பவுன் நகை கொள்ளையடித்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர் .
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கவுந்தப்பாடி குருச்சான் வலசு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் இவர் இதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில் கடந்த 12ம் தேதி சுப்பிரமணியம் கடைக்கு வந்த இரு இளைஞர்கள் கடை மற்றும் வீடுகளில் போதை பொருட்கள் சோதனை செய்யவேண்டும் என்று கூறி வீட்டிற்குள் சென்றுள்ளனர். சுப்ரமணியத்தின் கவனத்தை திசை திருப்பிய இளைஞர்கள் வீட்டில் இருந்த 9 பவுன் நகையை திருடி சென்றனர்.
இதனையடுத்து வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ததில் இளைஞர்கள் திருடியது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் கொண்டு இருவரையும் தேடி வந்தனர்.இதில் இவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் கருப்பசாமியை கைது செய்து அவர்களிடமிருந்து நகையை மீட்டனர் . இவ்வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய சிசிடிவி கேமரா முக்கியமாக இருந்ததால் பொதுமக்கள் அவரவர் வீடுகளில் சிசிடிவி கேமரா பயன்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளனர்.