கோவிலின் செயல் அலுவலர் போலி கணக்கு எழுதி 3 கோடி முறைகேடு: பா.ஜ.க வினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

28 August 2020, 6:52 pm
Quick Share

ஈரோடு: ஈரோட்டில் பிரசித்தி பெற்ற கோயிலின் செயல் அலுவலர் போலி கணக்கு எழுதி 3 கோடி முறைகேடு செய்தாக பா.ஜ.க வினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியிலுள்ள மகுடேஸ்வர்ர் கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் மிகவும் பிரசித்து பெற்றது.மேலும் இங்கு வரும் பக்தர்கள் பரிகாரங்கள் செய்து வழக்கம். இந்த நிலையில் இந்த இரண்டும் கோயில்களுக்கும் செயல் அலுவலராக இருக்கும் முத்துசாமி என்பவர் கோயில்களின் செலவு கணக்குகளை போலி செலவு ரசீது தயார் செய்து 3 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்துள்ளதாக பொதுமக்கள் சார்பில் இந்து அறநிலையத்துறைக்கு புகார்கள் சென்றன. இதனையடுத்து கடந்த சில நாட்களாக தணிக்கை நடைபெற்று, நிதியில் முறைகேடு நடைபெற்றதாக தெரியவந்த்து.

இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் ஈரோடு பா.ஜ.க புகார் மனு அளித்தனர். அதில் தணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும் போது தணிக்கை அதிகாரிகள் ராஜாராமன், பழனிசாமி ஆகியோர் முறைகேடு செய்த முத்துசாமிக்கு ஆதரவாக தணிக்கையில் ஆவணங்களை மாற்றி வைப்பதாகவும், செயல் அலுவலர் முத்துணாமிக்கு எதிராக சாட்சியம் அளித்த கோயில் ஊழியர்களை மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்த பா.ஜ.கவினர் தணிக்கை முடியும் வரை செயல் அலுவலர் முத்துசாமியை பணிநீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

Views: - 26

0

0