காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தல்…

28 August 2020, 5:40 pm
Quick Share

ஈரோடு: நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட்டை மத்திய அரசு கொரோனா காலகட்டத்தால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மாணவர்களின் மனநிலை மற்றும் பொதுமுடக்கத்தால் மாணவர்கள் நுழைவு தேர்வுக்கென தனியாக பயில சூழ்நிலை இல்லாத நிலையில் மன அழுத்தம் அதிகரித்துள்ளது எனவும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீட் மற்றும் ஜே.இ.இ போன்ற நுழைவு தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மத்திய அரசை எதிர்த்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

Views: - 27

0

0