ஒரு தலை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண்ணின் தாய்: சாலையில் தாய்க்கு நேர்ந்த சோகம்

By: Udayaraman
7 October 2020, 7:53 pm
Quick Share

ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் கத்தியால் தாக்கியதால் மேரி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் தடுக்க வந்தவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரியமொடச்சூர் பகுதியில் வசித்து வருபவர் மேரி. இவர் வண்டியில் துணி வியாபாரம் செய்து வருகிறார். மேரி தனது 5 மகள்களில் இருவருக்கு திருமணமான நிலையில் 3 மகள்கள் தணியார் நூற்பாலையில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மேரி தனது இரண்டாவது மகள் மற்றும் மருமகனுடன் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு ஹெல்மெட் அணிந்து வந்த நபர் “உனது கடைசி பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைக்க மறுக்கிறீயா ” என கூறி மேரியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதனை தடுக்க வந்த கணேஷ் என்பவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார். பலத்த காயமடைந்த இருவரையும் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் மேரி என்பவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மேரியின் கடைசி மகளை ஒருதலையாக காதலித்து வந்த அந்தியூரை சேர்ந்த நபர் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தனிப்பட்ட அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Views: - 37

0

0