10 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வில் மதிப்பெண் குறைவாக வழங்கியதாக புகார்… தனியார் பள்ளியை கண்டித்து பெற்றோர்கள் போராட்டம்…

12 August 2020, 9:48 pm
Quick Share

ஈரோடு: ஈரோடு அருகே மாமரத்து பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில்10 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வில் மதிப்பெண் குறைவாக வழங்கியதாக புகார் கூறி தனியார் பள்ளியை கண்டித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் மாமரத்துபாளையம் இந்து கல்வி நிலையதில் 10ம் வகுப்பில் 200 மாணவ, மாணவிகள் கடந்த ஆண்டு படித்துள்ளனர். திங்கள்கிழமை வெளியான தேர்வு முடிவில் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மதிப்பெண் குறைவாக அளித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளி முன்பாக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அரையாண்டு தேர்வின் போது நூறு மதிப்பெண்ணுக்கு பதிலாக 85 மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட்டுள்ளதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டுகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் மாணவ மாணவிகளை பள்ளி நிர்வாகம் உள்ளே அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Views: - 6

0

0