பாஜகவில் இணைந்த விடுதலை சிறுத்தை கட்சியினர்

6 September 2020, 6:04 pm
Quick Share

ஈரோடு: விடுதலை சிறுத்தை கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜல்லிப்பட்டி முருகன் தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் பாரதிய ஜனதா கட்சிக்கு மாற்று கட்சியில் இருந்து அதிகளவில் இணைந்து வருகின்றனர்.இந்நிலையில் ஈரோடு மாவட்டம் நால்ரோடு பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜல்லிப்பட்டி முருகன் ஆதரவாளர்கள் ஏராளமானோருடன் தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டார். இதுகுறித்து முருகன் ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில்,

பாரத பிரதமர் மோடி அவர்களின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நாட்டுப்பற்று போன்ற செயல்களால் ஈர்க்கப்பட்டு தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டதாகவும், வரும் காலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வேன் என்றார். பிரதமர் மோடி அவர்களின் சாதனை விளக்கும் புத்தகம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் எஸ்.சி பிரிவு மாநில துணைத்தலைவர் விநாயகமூர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் குரு குணசேகர் ,மாவட்ட செயலாளர் ரகுவரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Views: - 6

0

0