6 மாத கடன் தொகை செலுத்த விளக்கு அளிக்கப்பட்ட தொகைக்கு வட்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்..!!

22 September 2020, 11:08 am
Quick Share

கொரானா காலத்தில் அரசு அறிவித்த 6 மாத கடன் தொகை செலுத்த விளக்கு அளிக்கப்பட்ட தொகைக்கு வட்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் அப்படி இல்லாத பட்சத்தில் நாடு தழுவிய அளவில் வணிகர்களை ஒன்றிணைத்து வரி கொடா இயக்கம் போராட்டம் நடத்தப்படும் என கோவை துடியலூரில் நடைபெற்ற தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை கூட்டத்தில் அதன் மாநிலத் தலைவர் முத்துகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவை துடியலூரில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவைக் கூட்டம் அதன் மாநிலத் துணைத் தலைவர் தங்கசாமி என்கிற திருவேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. மண்டல தலைவர் செளந்தர், வடக்கு மாவட்ட தலைவர் ரஞ்சித், கிழக்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம், மேற்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்த இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் முத்துகுமார் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும் போது கொரானா காலத்தில் அரசு அறிவித்த 6 மாத கடன் தொகை செலுத்த விளக்கு அளிக்கப்பட்ட தொகைக்கு வட்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் அப்படி இல்லாத பட்சத்தில் நாடு தழுவிய அளவில் வணிகர்களை ஒன்றிணைத்து வரி கொடா இயக்கம் போராட்டம் நடத்தப்படும்.

முடங்கி கிடக்கும் வணிகர் நலவாரிய செயல்பாடுகளை முடுக்கிவிட வேண்டும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வணிகர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம் என்று உறுதிமொழி அளிக்கும் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்போம், தஞ்சை மண்டலத்தை உணவு பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தது போன்று கோவை மாவட்ட மேற்கு மண்டலத்தை வர்த்தக பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்.


வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், உப்பாறு அணை வறண்டு இருப்பதை உடனடியாக தண்ணீர் நிரப்பி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும், கோவை விமான நிலையைத்தை மிக விரைவாக விரிவாக்கம் செய்ய வேண்டும். சந்தை இல்லாமல் வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் உடனே சந்தைகளை திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மாணங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார், பொருளாளர் சமுத்திர பாண்டி, கிழக்கு மாவட்ட செயலாளர் தெய்வசிகாமணி, பொருளாளர் லட்சுமணம், மேற்கு மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ்வரன், மாநகர இளைஞர் அணி தலைவர் கண்ணன், செயலாளர் லோகபிரபு, பிரசாத், செல்வராஜ், ப்[இரபாகரன், ஆனந்த், சுயம்பு, சுபாஷ், அருள்பெருமாள், தமிழ்வாணன், பொன்ராஜ், ஜெயராம் உள்பட வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.