போக்சோ வழக்கில் தேடப்பட்டு வரும் பா.ஜ.க பிரமுகரை கட்சியில் இருந்து நீக்கம்

Author: Udayaraman
5 August 2021, 6:31 pm
Quick Share

சென்னை: போக்சோ வழக்கில் தேடப்பட்டு வரும் பா.ஜ.க பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைமை உத்தரவு விட்டுள்ளது.

சென்னை கொடுங்கையூரை சேர்ந்த பெண் மற்றும் அவரது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு பெரம்பூர் மேற்கு மண்டல தலைவர் பார்த்தசாரதி மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பார்த்த சாரதியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் வட சென்னை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ராஜேந்திர பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாலும் பார்த்தசாரதி மீது காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாலும் கட்சியின் பொறுப்பிலிருந்து அவரை நீக்குவதாகவும் தொடர்ந்து அவர் கட்சியில் பொறுப்பில் இருப்பதாக கூறி செயல்பட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். பார்த்தசாரதி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து 20 நாட்கள் கடந்த நிலையில் இனியாவது எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்வார்கள் என பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Views: - 93

0

0