கல்குவாரியில் பாறைகளை உடைக்க வைத்த வெடி வெடித்து: வீடு இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு

Author: Udhayakumar Raman
22 September 2021, 6:29 pm
Quick Share

நெல்லை: ராதாபுரம் அருகே சீலாத்திகுளத்தில் கல்குவாரியில் பாறைகளை உடைக்க வைத்த வெடி வெடித்து சிதறியதில் அருகில் உள்ள வீடு இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுவன் ஆகாஷ் இடிபாடுகள் சிக்கி உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுகன்யா. இத்தம்பதியினருக்கு ஆகாஷ் (3 வயது) என்ற சிறுவன் உள்ளான். கூலித் தொழிலாளியான முருகன் இன்று வேலைக்கு சென்று இருந்தார். அப்போது சிறுவன் ஆகாஷ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது சுகன்யா கடைக்கு சென்று இருந்தார். அப்போது இவரது குடியிருப்புக்கு பகுதிக்கு மிக அருகில் உள்ள கல்குவாரியில் பாறைகளை உடைக்க வெடி வெடிக்க செய்துள்ளனர். அப்போது பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்ததில் முருகனின் கான்கிரீட் வீடு இடிந்து விழுந்தது.

கட்டிட இடிபாடுகளுக்குள் தூங்கி கொண்டிருந்த சிறுவன் ஆகாஷ் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் அப்பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. சிறுவன் ஆகாஷ் இறந்த விவகாரம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவலறிந்த ராதாபுரம் தாசில்தார் ஜேசுராஜன், வள்ளியூர் எஸ் பிசம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராதாபுரம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Views: - 84

0

0