21 கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

27 November 2020, 6:21 pm
Quick Share

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய எரியான மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவான 23.3 அடியை எட்டும் நிலையில் உள்ளதால் 21 கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி கடந்த சில தினங்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால், முழு கொள்ளளவான 694 கன அடியை எட்டும் நிலையில் உள்ளது. 23.5 அடி உயரம் உள்ள இந்த ஏரியில், தற்போது 22.2 அடியை எட்டியுள்ளது. மேலும் நீர் வரத்து 1700 கன அடி வந்து கொண்டுள்ளது.

இதனால் ஏரியிலிருந்து உபரி நீர் கிளியாற்றில் வெளியேற்றப்படுவதால், கத்திரிச்சேரி, விழுதமங்கலம், முருக்கச்சேரி, வீராணகுண்ணம் உள்ளிட்ட 21 கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஏரியின் நிலைமையை பொதுப்பணித் துறையினரும், வருவாய் துறையினரும் கண்காணித்து வருகின்றனர்.

Views: - 0

0

0