சங்கராபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை: மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அரசு அறிவுறுத்தல்

Author: kavin kumar
7 November 2021, 2:29 pm
Quick Share

புதுச்சேரி: வீடூர் அணை நிரம்பியதால் புதுச்சேரியில் ஓடும் சங்கராபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதையடுத்து கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளார்.

தொடர் கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணையில் தனது முழு கொள்ளவான 32 அடி எட்டியதை தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும் அணை எப்போது வேண்டுமென்றாலும் திறக்கப்படவுள்ளதால் சங்கராபரணி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்படும் என்ற அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் மேற்குபகுதியில் சங்கராபரணி ஆற்றின் கரையோரங்களில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வருவாய்த்துறை அதிகாரிகள் மணலிப்பட்டு, செல்லிப்பட்டு, குமாரப்பாளையம், வம்புபட்டு, கரிக்கலப்பட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று தண்டோரா போட்டு வெள்ள அபயா எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மேலும் சங்கராபரணி ஆற்றின் கரையோரங்களை கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

Views: - 248

0

0