நடிகர் சூர்யாவை தவறாக வழிநடத்தும் தீவிரவாதிகள்: இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணி பேட்டி

24 September 2020, 11:32 pm
Quick Share

நீலகிரி: நீட் தேர்வை எதிர்ப்பதாக கோஷங்களை எழுப்பிக் கொண்டிருக்கும் நடிகர் சூர்யாவின் அறக்கட்டளையில் சில தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் இணைந்து சூர்யாவை தவறாக வழிடத்துவதாக இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வரன் சுப்ரமணி கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வரன் சுப்ரமணி நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள புதிய பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது நீட் தேர்வை எதிர்ப்பதாக கோஷங்களை எழுப்பிக் கொண்டிருக்கும் நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் சில தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் இணைந்து சூரியாவை தவறாக வழி நடத்துகின்றனர், இதற்கு நடிகை ஜோதிகாவும் காரணமாக உள்ளார். சூர்யாவின் குடும்பம் ஆன்மீக பற்றை கொண்டது நடிகர் சூர்யா, ஜோதிகா இவர்களை தந்தை சிவக்குமார் தான் நல்வழிப்படுத்த வேண்டும்.

சூர்யாவை கண்டித்து மாணவர்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நடிகர் சூர்யா தனது கொள்கையை மாற்றவில்லை என்றால் இந்து முன்னணியினர் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என கூறினார். இதனைத் தொடர்ந்து மும்மொழி கல்விக் கொள்கையில் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இதனை எதிர்ப்பதாகவும், மத்திய அரசு ஹிந்தி மொழியை திணிப்பதாக மக்களிடையே தவறான பிரச்சாரங்களை திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக கொண்டு செல்கின்றனர். தற்போது நீட் தேர்வை எழுதிய மாணவ, மாணவிகள் அனைவரும் மிக எளிமையாக உள்ளது. நீட் தேர்வு கட்டாயம் தேவை என்ற மனநிலையுடன் உள்ளனர் அதனுடைய பலன் நிச்சயம் கிடைக்கும் என கூறினார்.

மேலும் கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளில் பங்களாதேஷத்தை சேர்ந்த சில முஸ்லீம்கள் போலி அடையாள அட்டைகளை வைத்த சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். அவர்களைக் கண்டறிந்து திருப்பி அனுப்பவேண்டும். அதேபோல் கம்பம், தேனி, உடுமலைப்பேட்டை உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் நக்சலைட்டுகள் பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் தீவிரவாதம் பரவாமல் இருக்க தமிழ்நாடு உளவுத்துறை தனி குழுக்கள் அமைக்கப்பட்டு இதனை கண்காணிக்க வேண்டும் என்றார்.

Views: - 9

0

0