12 ஆம் வகுப்பு படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

3 September 2020, 5:57 pm
Quick Share

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே 12 ஆம் வகுப்பு படித்து விட்டு படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியில் சம்பத் வயது 43 என்பவர் மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வருவதாக மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அவர்களுக்கு பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். அதனடிப்படையில் வட்டாட்சியர் மோகன் மற்றும் அரசு மருத்துவர் குமரவேல் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்பொழுது பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து மருத்துவ உபகரணங்கள் மருந்துகள் ஆகியவற்றை கைப்பற்றி போலி மருத்துவரான சம்பத்தை ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Views: - 0

0

0