கள்ளக்காதலன் வெட்டி படுகொலை: மனைவிக்கு அரிவாள் வெட்டு: காவல் நிலையத்தில் சரணடைந்த கணவர்

Author: kavin kumar
11 August 2021, 7:34 pm
Quick Share

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் ஆத்திரத்தில் கள்ளக் காதலனையும் தனது மனைவியும் அரிவாலாள் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் வடபெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் எடப்பாளையம் பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். அங்கு லோகேஸ்வரி என்பவர் பணிபுரிந்து வந்தார். லோகேஸ்வரியின் கணவர் லட்சுமணன் அவரை பணிக்கு செல்ல கூடாது என தெரிவித்தும் லோகேஸ்வரிக்கும் ராஜ்குமாருக்கு கள்ளத்தொடர்புத இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவருடைய தொடர்பை துண்டிக்க மறுத்து தொடர்ந்து பணிக்குச் சென்றதால் ஆத்திரமடைந்த லட்சுமணன் கடைக்கு சென்று ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியதில் ராஜ்குமார் படுகாயங்களுடன் உயிரிழந்தார். லோகேஸ்வரி சென்னை ஸ்டான்லி அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டிய லோகேஸ்வரியின் கணவர் லட்சுமணன் சோழவரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

Views: - 214

0

0