பிரபல ரவுடி பிளேடு கபாலி பேருந்து நிலையத்தில் ரகளை: பொதுமக்கள் பயந்து ஓட்டம்…

Author: Udayaraman
4 August 2021, 11:02 pm
Quick Share

கோவை: காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் பிரபல ரவுடி பிளேடு கபாலி மற்றும் அவரது கூட்டாளிகள் குடிபோதையில் கையில் பிளேடுடன் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை டவுன் பேருந்து நிலையம் இன்று பயணிகள் வரத்து அதிகமாக இருந்தது. பரபரப்பாக காணப்பட்டு கொண்டிருந்தது. அப்போது 2 வாலிபர்கள் குடிபோதையில் பேருந்து நிலையத்திற்கு முன் பகுதியில் வந்து கட்டிப் புரண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தன. பிறகு அதில் ஒரு நபர் நான் பார்க்காத ஜெயிலா? என கொச்சையான வார்த்தைகள் பேசியபடி உடனிருந்த நபரை வாயில் ஒதுக்கி வைத்திருந்த பிளேடை எடுத்து உடலில் வெட்ட முயன்றான். பிறகு இருவரும் கட்டிப் புரண்டு பேருந்து நிலையத்தில் சண்டை போட்டனர். இதை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். அதை யாரும் தடுப்பதற்கு தயாராக இல்லை. பிறகு போதையில் தள்ளாடியபடி பொதுமக்களை, பெண்களை இடித்தபடி அந்த நபர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.

இது குறித்து அங்கு வந்த காட்டூர் காவல் நிலைய காவலர் ஒருவரிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறிய சம்பவங்கள் வியப்பாக இருந்தது. இது ரொம்ப சாதாரண விஷயம் காந்திபுரம் காட்டூர் போலீஸ்10 -க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. அவர் பெயர் பிளேடு கபாலி, கொலை கொள்ளை வழக்குகளும் உள்ளது. இவன் ஒரு நூதனமான திருடன். வாயில் பிளேடு வைத்துக்கொண்டு குடிபோதையில் தள்ளாடி கொண்டு கூட்டமாய் இருக்கும் பொழுது பயணிகள் மீது விழுவது. அப்பொழுது அவர்கள் கழுத்தில் உள்ள செயின் பாக்கெட்டில் உள்ள பர்சுகளை பிக்பாக்கெட் அடிப்பது இவனுடைய வேலை என தெரிவித்தார். பிளேடை மூஞ்சியில் துப்பிய உடன் அந்த நபர் என்ன செய்வது என தெரியாமல் நிலைகுலைந்து போவார்கள. அப்போது அந்த வாய்ப்பை பயன்படுத்தி இவன் எளிமையாக திருடுடிவிடுவான்.

இதற்கு முன்னர் அவன் கொலை கொள்ளை மற்றும் பல செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். இப்பொழுது பிக்பாக்கெட் அடிப்பதற்காக களமிறங்கியுள்ளார். இது இவருடைய மனைவியும் உடந்தை ஒரு சில நேரங்களில் அவன் மனைவியுடன் வந்து மனைவி மூலமாக விபச்சாரத்துக்கு அழைப்பது போல ஆண்களை அழைத்துக்கொண்டு சென்றவுடன், இவன் பின்னாடியே சென்று அந்த நபரை இருவரும் சேர்ந்து அடித்து உதைத்து அவரிடம் உள்ள பணங்களை பிடுங்கிக்கொண்டு நடுத்தெருவில் விட்டு விடுவார்கள். அதில் அசிங்கப்பட்ட அந்த நபர் புகார் கொடுக்காமல் சென்று விடுவார். காந்திபுரம் சுற்றி உள்ள நடைபாதை கடைகாரர்கள். ஆட்டோ ஓட்டுனர்கள். இவன் மீது புகார் தெறிவித்து பிடித்துக் கொடுத்தால், ஜெயிலில் இருந்து வெளியே வந்தவுடன். இவர்களை கொலை மிரட்டல் விடுத்து தாக்குவதாக இவனை கண்டாலே அந்த பகுதியில் உள்ள வியாபாரிகளும் ஆட்டோ ஓட்டுனர்களும் அஞ்சி நடுங்குகின்றன.

இது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறான். இரவு நேரத்தில் இவனை நாம் கைது செய்ய முடியாது. காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றால் பிளேடை தன் உடம்பில் கீறிக்கொண்டு போலீசாருக்கு தொந்தரவு கொடுப்பான் என கூறிவிட்டு அசால்டாக நகர்ந்து விட்டார். இதுபோன்ற மோசமான நபரை ஏன் காந்திபுரம் பகுதியில் காட்டூர் போலீசார் உளவ விட்டிறிருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது.இது குறித்து அங்கு இருந்த சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் லதா அவர்களுக்கும் நாம் எடுத்த வீடியோவை போட்டு காண்பித்தோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.இதுபோன்ற நூதனமான மக்கள் கூட கூடிய இடங்களில் மிகவும் கொடூரமான முறையில் திருடிய நபரை உடனடியாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 80

0

0