மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைகாளி கைது: தகவல் அளிக்காமல் என்கவுன்டர் செய்யபோவதாக மிரட்டல் என தாய் குற்றச்சாட்டு

20 September 2020, 10:54 pm
Quick Share

மதுரை: திருச்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைகாளியை என்கவுன்டர் செய்யபோவதாக காவல்துறையினர் மிரட்டல் விடுப்பதாக அவரது தாய் குற்றச்சாட்டியுள்ளார்.

மதுரை கீரைத்துறை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான வெள்ளை காளி மீது கடந்த 2003ஆம் ஆண்டு முதல் கோஷ்டி மோதலில் ஏற்பட்ட 14கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கொலை வழக்கின் கீழ் கைதுசெய்ய முயன்றபோது தப்பியோடிய வெள்ளைகாளி 3ஆண்டுகளாக தலைமறைவாகி இருந்துவந்த நிலையில், காளியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு தென்காசி அருகே குற்றாலத்தில் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது திருச்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து மதுரை காவல்துறை தனிப்படையினரிடம் ஒப்படைக்கட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே வெள்ளை காளியின் தாயார் ஜெயக்கொடி தன் மகனை போலிசார் கைது செய்தது குறித்து தகவல் தர மறுப்பதாகவும், மேலும் காவல்துறையினர் தனது மகனான காளியை என்கவுண்டர் செய்யபோவதாக மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் இதுவரை ரௌடி வெள்ளைகாளியை வைத்து எங்கு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது என்ற தகவல் காவல்துறை தரப்பில் வெளியாகவில்லை. ஏற்கனவே இவரின் கூட்டாளிகள் இருவர் மதுரை சிக்கந்தர் சாவடி அருகே என்கவுண்டர் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 114

0

1