கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரை விட்டு தள்ளி வைத்ததை கண்டித்து குடும்பத்துடன் விவசாயி தர்ணா

Author: Udayaraman
28 July 2021, 6:51 pm
Quick Share

தருமபுரி: பாலக்கோடு அருகே கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரை விட்டு தள்ளி வைத்ததை கண்டித்து. குடும்பத்துடன் விவசாயி தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பேளாஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் இடும்பன், இவருக்கும். இவரது உறவினரான கிருஷ்ணன் என்பவரது குடும்பத்தினருக்கும் நில தகராறு ஏற்பட்டது. இப்பகுதியில் உள்ள ஊர் கவுண்டர்கள் ஒன்று சேர்ந்து இடும்பன் மற்றும் அவரது சகோதரர் ஞானவேல் மற்றும் அவரது தந்தை கோவிந்தன் ஆகிய 3 பேரையும் அழைத்து ஊரில் பஞ்சாயத்து பேசி இடும்பன் குடும்பத்தாரிடம், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வசூலித்து உள்ளனர். மேலும் அபராதமாக, 2 லட்ச ரூபாய் கொடுத்தால் மட்டுமே ஊரில் இருக்க வேண்டும் எனவும் அதுவரை ஊரில் இருக்கக் கூடாது என ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

இதுகுறித்து இடும்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் பாலக்கோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால், மனமுடைந்த இடும்பன் அவரது விவசாய நிலத்தில், குடும்பத்துடன் உரிய நீதி கிடைக்கும்வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 139

0

0