கால்நடை மருத்துவமனை அமைக்கக் கோரி நாய், மாடுகளுடன் விவசாயிகள் போராட்டம்..!!!

Author: Babu Lakshmanan
21 September 2021, 4:38 pm
Quick Share

கும்பகோணம் : பாபநாசத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நாய், மாடுகளின் கழுத்தில் கோரிக்கை பதாகைகளை மாட்டி வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரம் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைத்திட கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கால்நடை மருத்துவமனை அமைக்க ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்காக வருவாய்த்துறை சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் கால்நடை மருத்துவமனை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை தனிநபர்களால் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே கால்நடை மருத்துவமனை காலதாமதம் செய்து அலட்சியமாக செயல்படும் கால்நடை துறையினரை கண்டித்து பாபநாசம் ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம விவசாயிகள் நாய், ஆடு மற்றும் மாடுகளுடன் வந்து அவற்றின் கழுத்தில் கோரிக்கை பதாகைகளை அணிவித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் வலுப்படுத்தப்படும் என அதிகாரிகளுக்கு விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Views: - 89

0

0