யானை மிதித்து விவசாயி உயிரிழப்பு

Author: Udayaraman
24 July 2021, 7:58 pm
Quick Share

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதிக்குள் ஆடு மேய்ச்சலுக்கு சென்ற விவசாயியை யானை மிதித்து கொன்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த பெட்டமுக்கிலாளம் அருகே உள்ள குள்ளல்லி கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பையன். இவர் விவசாயம் மற்றும் ஆடு களை வளர்த்து வருகிறார். இவர் ஆடுகளை மேய்ச்சலுக்கு அருகிலுள்ள வனப்பகுதிக்குள் காலையில் அழைத்து சென்று மாலையில் வருவர்.இந்நிலையில் நேற்று சின்னப்பையன் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்குள் சென்றவர், நீண்ட நேரம் கழித்து வீடு திரும்பவில்லை, இதையடுத்து அவரின் உறவினர்கள் அவரை தேடி வனப்பகுதிக்குள் சென்றபோது யானை தாக்கி உயிரிழந்தது, தெரிய வந்துள்ளது. இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து சென்ற வன ஊழியர்கள் கிராமமக்கள் உதவியுடன் சின்னப்பையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 141

0

0