சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

26 November 2020, 4:49 pm
Quick Share

மதுரை: தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

தென் மாவட்டத்தில் மதுரை மாவட்டத்தில் மட்டுமே அலங்காநல்லூர் அருகே தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது, இந்த ஆலையில் கரும்பு வரத்து குறைவாக உள்ளதாக கூறி 2019 ஆம் ஆண்டில் இருந்து அரவை நிறுத்தப்பட்டது, தற்போது மதுரை மாவட்டத்தில் 30 ஆயிரம் டன் கரும்பு பயிரிடப்பட்டு உள்ளதாலும், 3 ஆயிரம் ஏக்கர் பதிவு செய்யப்படாத கரும்பு பயிரிடப்பட்டு உள்ளதாலும்,

2 ஆண்டுகளாக மூடப்பட்ட தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனடியாக திறந்து அரவையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 50 க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கரும்பு விவசாயிகளையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Views: - 25

0

0