தொடர் மழை காரணமாக உழவர்சந்தைக்கு விவசாயிகள் வருகை குறைவு
Author: kavin kumar31 October 2021, 1:29 pm
புதுச்சேரி: புதுச்சேரியில் தொடர் மழை காரணமாக புதுச்சேரி உழவர் சந்தையில் விவசாயிகளின் வரத்து குறைந்து காணப்பட்டது.
வடகிழக்கு பருவமழை தொடஙகியிருப்பதன் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பரவலாக கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று விடியற்காலையில் இருந்து புதுச்சேரி நகரப்பகுதிகள், காலாப்பேட், கனகசெட்டிக்குளம், மதகடிப்பட்டு, வில்லியனூர், பாகூர், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக புதுச்சேரி நகரப்பகுதியில் இயங்கும் உழவர்சந்தைக்கு விவசாயிகள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. வழக்கமால ஞாயிற்றுக்கிழமைகளில் கிராமப்பகுதிகளில் இருந்து அதிகளவு விவசாயிகள் தங்களின் நிலத்தில் விளைந்த காய்கறிகளை கொண்டு வந்து உழவர் சந்தையில் விற்பது வழக்கம். தொடர் மழை காரணமாக புதுச்சேரி உழவர் சந்தையில் விவசாயிகளின் வரத்து குறைந்து காணப்பட்டது. மேலும் பொதுமக்கள் வராததால் வந்திருந்த காய்கறி வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இந்த மழை நீடிக்கும் பட்சத்தில் தீபாவளிக்கு கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்களும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படும்.
0
0