தேசியக்கொடி மற்றும் விவசாய கருவிகளுடன் விவசாயிகள் சங்க கூட்டியக்கத்தினர் போராட்டம்

26 January 2021, 2:02 pm
Quick Share

கோவை: கோவையில் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, தேசியக்கொடி மற்றும் விவசாய கருவிகளுடன் விவசாயிகள் சங்க கூட்டியக்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தினத்தை முன்னிட்டு விவசாயிகள் டிரேக்டர் பேரணி நடத்தினர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விவசாயிகள் சங்க கூட்டியக்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

தேசியக்கொடி மற்றும் விவசாய கருவிகளுடன் ஊர்வலமாக வந்து போராட்டம் நடத்தினர். அப்போது வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். இதேபோல கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து டாடாபாத் பகுதி வரை தொழிற்சங்க கூட்டுக்குழுவினர் இரு சக்கர வாகனப் பேரணி நடத்தினர். 200 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் தேசியக்கொடிகளுடன் பேரணி நடத்தினர்.

Views: - 3

0

0