பழுது அடைந்த மதகு பலகைகளை உடனடியாக சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

By: Udayaraman
5 October 2020, 6:19 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூரில் பாசன வாய்க்காலில் உள்ள பழுது அடைந்த மதகு பலகைகளை உடனடியாக சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் ஆறுகளில் இருந்து பிரியும் சிறு குறு வாய்க்கால் மூலமாக பாசனத்திற்கு விவசாயிகள் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் அருகே ஓடம்போக்கி ஆற்றில் இருந்து பிரியும் எட்டியலூர் பாசன வாய்க்காலை நம்பி பாலவை கிராமம், எட்டியலூர், சேப்ரான் கட்டளை, நாவேலி உள்ளிட்ட கிராமங்களில் 2500 ஏக்கர் விவசாய நிலங்களும், இதேபோன்று மோட்டூர் பாசன வாய்க்காலை நம்பி வடகண்டம், தில்லாவட்டம், குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் 500 ஏக்கர் விவசாய நிலமும் உள்ளன.

இந்நிலையில் இந்த வாய்க்கால்களில் உள்ள சட்ரஸ் மதகு பலகைகள் அனைத்தும் முற்றிலும் பழுதடைந்துள்ளது மேலும் வாய்க்காலின் தடுப்பு கால்வாய்கள் உடைந்து சேதமடைந்துள்ளது. இதனால் வருகிறது மழைக்காலம் என்பதால் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வரும்பொழுது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அல்லது தண்ணீர் வரத்து அதிகரித்தாலும் வயல்களுக்கு புகும் நிலையில் வாய்க்கால்கள் உள்ளன. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் உள்ள சிறு குழுவாய் கால்களில் உள்ள மதகு பலகைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும், இல்லை என்றால் மழை காலங்களில் மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படக் கூடிய சூழல் உருவாகும். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 33

0

0