ராக்கெட் மூலம் பிரதமருக்கு கோரிக்கை அனுப்பி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்…

Author: kavin kumar
6 November 2021, 4:54 pm
Quick Share

திருச்சி: ராக்கெட் மூலம் பிரதமருக்கு கோரிக்கை அனுப்பி விவசாயிகள் நூதன உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்தர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூரில் விவசாயிகளை கார் ஏற்றி கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள்திருச்சி – கரூர் பைபாஸ் மலர் சாலையில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு கடந்த மாதம் 12ம் தேதி முதல் 46 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து 26ம் நாளான இன்று மத்திய மோடிக்கு விவசாயிகளின்கோரிக்கைகளை எட்டும் வகையில் ராக்கெட்டில் கோரிக்கை எழுதி வைத்து அனுப்பும் நூதன உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு பேசுகையில்,கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் சென்று போராட முற்பட்டால் காவல்துறையினர் எங்களை வீட்டுக்காவலில் வைத்திருக்கிறது. மேலும், மோடி இந்த நாட்டை சர்வாதிகார நாடாக ஹிட்லருடைய நாடாக மாற்றி விடுகிறாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. எனவே. எங்கள் கோரிக்கைகளை அவருக்கு தெரிவிக்கும் விதமாக இன்று ராக்கெட்டில் கோரிக்கை வைத்து அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்தார்.

Views: - 175

0

0