குமரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 26-ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெறும் .! மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தகவல்

23 November 2020, 9:55 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இம்மாதம் காணொலி மூலம் நடைபெறும் என ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து அவரது செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக காணொலி மூலம் வருகின்ற 26ஆம் தேதி நடைபெறும் .கூட்டத்தில் வேளாண்மைதுறை ,தோட்டக்கலைதுறை, வேளாண்மை விற்பனைதுறை, வேளாண் பொறியியல் துறை ,பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் இதர துறை அலுவலர்கள் பங்கேற்று விவசாயிகள் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு தகுந்த விளக்கம் தெரிவிக்க உள்ளனர் .

முந்தைய விவசாய கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கான பதில்களை தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் அன்று காலை பெற்றுக்கொள்ளலாம். அது சம்பந்தமாக கூடுதல் விபரம் தேவைப்படுவார்கள் காணொலி மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் .விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை கொரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சம்பந்தப்பட்ட வட்டார மேலாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக கூட்டத்தில் தெரிவிக்கலாம் .

தாங்கள் கொண்டு வரும் விவசாயம் சம்பந்தமான கோரிக்கை மனுக்களை அந்தந்த வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அளித்து பயனடையலாம். மேலும் கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாதவர்கள் தங்கள் மனுக்களை [email protected]என்ற மின்னஞ்சல் முகவரியில் வருகின்ற 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம். இந்த கோரிக்கைகளுக்கான பதில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் விவசாய கோரிக்கை கூட்டத்திற்கு முன்னர் உரிய வழியாக விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Views: - 0

0

0