பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

23 February 2021, 12:57 pm
Quick Share

திருவண்ணாமலை: டீசல், பெட்ரோல் மற்றும் கேஸ் ஆகியவற்றுக்கு மாற்றாக பயோ பெட்ரோல், சாண எரிவாயு ஆகியவற்றை பயன்படுத்த கோரிக்கை வைத்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் சைக்கிள் டயர்களை ஒட்டுயும் செருப்புகளை இழுத்தும், சாண எரிவாயு தயாரிப்பது போன்று நூதன முறையில் போராட்டங்களை நடத்தினர். தற்போது நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலையும் மாதந்தோறும் கேஸ் சிலிண்டர்கள் விலையும் உயர்ந்து வருகிறது. எனவே இதற்கு மாற்றாக பயோ பெட்ரோல், சாண எரிவாயு ஆகியவைகளை பயன்படுத்த கோரிக்கை வைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கிராம பகுதிகளில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் கரும்பிலிருந்து பெறப்படும் மொலாசஸ் மூலம் தயாரிக்கப்படும் எரி சாராய தொழிற்சாலைக்கு பதிலாக எத்தனால் தயாரிக்கப்பட்டு பயோ பெட்ரோல் வழங்க வேண்டும்.சமையல் காஸ் சிலிண்டருக்கு பதிலாக சாண எரிவாயு அடுப்புகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 4

0

0