முகத்தில் கரி பூசி கொண்டு கொண்டு விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டம்

Author: Udhayakumar Raman
24 October 2021, 3:29 pm
Quick Share

திருச்சி: முகத்தில் கரி பூசி கொண்டு கொண்டு விவசாயிகள் நூதன முறையில் மத்திய அரசுக்கு கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும், மழையில் அழிந்து வரும் 10 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யக் கோரியும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தவர்களுக்கும் செய்ய தூண்டியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க கோரியும்

முதலான கோரிக்கைகளுடன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 46 நாட்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து கரூர் பைபாஸ், மலர் சாலையில் பிறந்து கடந்த 12ஆம் தேதி முதல் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் இன்று 13வது நாளாக மோடி இரட்டிப்பான லாபம் தருவார் என நினைத்திருந்த எங்களுக்கு அவர் முகத்தில் கரியைப் பூசிவிட்டார் என்பதை தெரிவிக்கும் வகையில் என்று முகத்தில் பூசிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 94

0

0