நெல்லுக்கு உரிய பணம் தராததால் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா

Author: kavin kumar
23 August 2021, 7:53 pm
Quick Share

வேலூர்: நெல்லுக்கு உரிய பணம் தராததால் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வேலூர் தொரப்பாடியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கின் முன்பாக இன்று காலை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் உதயகுமார் தலைமை தாங்கினார்.மாநில போராட்டக்குழு தலைவர் ரகுபதி, மாநில இளைஞரணி தலைவர் சுபாஷ் முன்னிலை வகித்தனர். அப்போது விவசாயிகள் கூறியதாவது ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேடந்தாங்கல் ,மேல் வீராணம், ஜோதிபுரம், சிறுகரும்பூர் உள்பட 23 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

இங்கு விவசாயிகள் விளைவித்த நெல்லை நேரடியாக அரசு நெல் கொள்முதல் செய்து வருகின்றனர். இதேபோல் சிறுவளையும் அடுத்த லட்சுமிபுரத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து கடந்த 90 நாட்களுக்கு முன்பு நெல் கொள்முதல் செய்யப்பட்டது.ஆனால் அதற்கு உண்டான பணம் இன்னும் விவசாயிகளுக்கு தரவில்லை.மேலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை எடுத்துச் செல்லாமல் கொல்முதல் செய்யாத மூட்டுகளை எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தொரப்பாடியில் உள்ள சிவில் சப்ளை குடோன் மண்டல மேலாளர் முருகேசனிடம் கேட்டதற்கு அவர் முறையான பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்திக்கவும் மறுத்து வருகிறார். இதனை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும் இதே நிலை நீடித்தால் விவசாயிகளை திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், மேலும் சென்னையில் சட்டசபை முன்பு உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த பாகாயம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் நெல்லுக்கு உரிய பணம் பெற்று தருவதாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Views: - 557

0

0