கரும்பு விவசாயத்தில் வேர் புழு நோய் தாக்கியதால் விவசாயிகள் வேதனை

Author: kavin kumar
10 August 2021, 4:29 pm
Quick Share

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பாப்பம்பாடி கிராமத்தில் கரும்பு விவசாயத்தில் வேர் புழு நோய் தாக்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் பெருமளவிலான விவசாயிகள் கரும்பு நடவு செய்து உள்ளனர். இதில் அரூர் சுப்பிரமணி சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டிற்கு மட்டும் சுமார் 6600 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பாப்பம்பாடி கிராமத்தில் சுமார் 30 ஏக்கருக்கு மேல் சி.ஓ 86032 என்ற ரகம் கரும்பு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடவு செய்து விவசாயிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கரும்புகள் அனைத்தும் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்புகள் ஆகும்.

தற்போது இந்த ரக கரும்பு வேர்களில் வேர் புழு நோயால் பாதிக்கப்பட்டு வேரற்று கீழே சாய்ந்து விழுந்து காய்ந்து விடுகிறது. குறிப்பிட்ட ஒரு பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பெரிய வகையான வேர் புழு படிப்படியாக அதிகரித்து பரவிவருவதாகவும் இந்த புழுவால் கரும்பு வயல்கள் முழுவதும் சேதம் ஏற்படுத்தி வருகிறது. அறுவடைக்கு இன்னும் ஆறு மாதகாலங்கள் இருக்கும் நிலையில் வேர் புழுவால் பாதிக்கப்பட்ட கரும்புகளை காப்பாற்ற முடியுமா என்ற சந்தேகம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்துவற்கு வழியின்றி தவித்து வருகின்றனர். எனவே சர்க்கரை ஆலை நிர்வாகம், வேளாண்மை துறை அதிகாரிகள் இப்பகுதியை ஆய்வு செய்து கரும்பு விவசாயிகளுக்கு வேர் புழு நோய் மேலும் அதிகரிக்காமல் இருக்க நோய் தடுப்பான் மருந்துகளை கொடுக்க வேண்டும். இந்நோயினை முழுவதுமாக கடடுபடுத்த விழிப்புணர்வு அளிக்க வேண்டும் எனவும், நோயினால் பாதிக்கபட்ட கரும்பு விவசாயிகளுக்கு உரிய நஷ்டயீடு கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 190

0

0