20 வருடங்களாக கண்மாய்க்கு நீர்வராமல் தவித்த விவசாயிகள்: உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக துணை ஆட்சியர் உறுதி

23 January 2021, 2:26 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் தனிநபர் ஆக்கிரமிப்பால் 20 வருடங்களாக கண்மாய்க்கு நீர்வராமல் தவித்த விவசாயிகள். துணை ஆட்சியர் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தொடர் மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டிய பிளவக்கல் அணையில் இருந்து கடந்த மாதம் நீர் திறக்கப்பட்டது. இதிலிருந்து வெளியேறும் நீரானது. ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 40 கண்மாய்களுக்கு சென்றடையும். அவ்வாறு செல்லும் போது பாட்டக்குளம் கிராமத்திலுள்ள தென்னாங்குளம் கண்மாயை நிறைந்த பின்பு அருகே உள்ள பானாங்குளம் கண்மாய்க்கு செல்லும். இந்த பானாங்குளம் கண்மாய் சுற்றியுள்ள சுமார் 500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் அமைந்துள்ள விவசாய நிலத்திற்கு இக்கம்மாய் நீரே ஆதாரம் ஆகும்.

இந்நிலையில் பாட்டகுளம் கிராமத்திலுள்ள தென்னங்குளம் கண்மாயின் இருந்து பானாங்குளம் கண்மாய்க்கு செல்லும் பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து பாதையை மூடி அந்த கண்மாயில் உள்ள நீரை தனது சொந்த நிலத்திற்கு கடந்த 20 வருடங்களாக பாய்ச்சி வந்துள்ளார்.இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றமானது தென்னாங்குளம் கண்மாயில் இருந்து பானங்குளம் கண்மாய் செல்லும் நீர் வழிப் பாதையில் கலிங்களை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இருந்த போதிலும் தனிநபர் பிடியில் உள்ள தென்னாங்குளம் கண்மாயில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட வெளியேறவில்லை. இதனைக்கண்டித்து பாணங்குளம் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கத்தினர் அப்பகுதியை சேர்ந்த பாலகுரு தலைமையில் இன்று தென்னாங்குளம் கண்மாயில் கூடாரம் அமைத்து போராட்டம் நடத்தினர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து தகவல் தெறிந்து அப்பகுதிக்கு வந்த துணை ஆட்சியர் தினேஷ்குமார் ஆக்கிரமிப்பு பகுதியை ஆய்வு செய்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில் இரண்டு நாட்களுக்குள் போராடும் விவசாயிகளுக்கு சாதகமாக முடிவு எட்டப்படும் என்று போராடிய விவசாயிகளிடம் தெரிவித்தார். நீர்வழி ஆக்கிரமிப்பு இருக்கக்கூடாது என்று நீதிமன்றம் சொல்லும்போது தனிநபர் ஒருவர் ஒரு கண்மாயை ஆக்கிரமித்து நீரை தடுத்து வைப்பது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 8

0

0