அமித்ஷா விட்டிற்கு முன்பு போராட்டம் நடத்துவதற்காக அறை மொட்டை அடித்து புறப்பட்ட விவசாயிகள்

24 November 2020, 2:54 pm
Quick Share

திருச்சி: திருச்சியிலிருந்து டெல்லியில் அமித்ஷா விட்டிற்கு முன்பு போராட்டம் நடத்துவதற்காக அறை மொட்டை அடித்து புறப்பட்ட விவசாயிகளை போலீசார் தடுத்தால் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு லாபகரமான விலை கொடுக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை தடைசெய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 26,27ம் தேதிகளில் தலைநகர் டெல்லியில் போராட்டமும், உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டின் முன்பு அறை மெட்டையுடன் உண்ணாவிரதம் இருக்கவும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு முடிவு செய்திருந்தார்.

அவரது தலைமையில் 500க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் ரயில் மூலம் டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்க்காக திருச்சி ரயில் நிலையத்திற்கு செல்வதற்காக இன்று காலை அய்யாக்கண்ணு அவரது வீடு அமைந்துள்ள திருச்சி-கரூர் பைபாஸ் சாலை அண்ணாமலை நகரில் இருந்து விவசாயிகளுடன் புறப்பட்டார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் தொடர்ந்து பயணம் செய்தால் அவரை கைது செய்ய காவல் துறையினர் தயாராக இருந்தனர். இதன் காரணமாக அய்யாக்கண்ணு வீட்டை வாசலில் மொட்டை போட்டுக் கொண்டு அமர்ந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் திருச்சி ரயில் நிலையத்திலும் அங்கு வரும் விவசாயிகளை கைது செய்வதற்கு போலீசார் தயராக இருந்தனர்.

இதைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அய்யாக்கண்ணு வீட்டிலிருந்து புறப்பட்டு திருச்சி –
கரூர் பைபாஸ் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் துணை கமிஷனர் வேதரத்தினம் தலைமையில் போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தை நடத்திய பின்னா கலைந்து சென்றனர். இந்நிலையில் சென்னையிலிருந்து டெல்லி செல்வதற்காக 131 பேருக்கு ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 960 ரூபாய் செலவில் ஜிடி எக்ஸ்பிரஸில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. போலீசார் அனுமதி மறுத்த காரணத்தினால் நட்டம் ஏற்படும் என அய்யாக்கண்ணு கோரிக்கை வைக்கவே, போலீசார் உடனடியாக டிக்கெட்டை கேன்சல் செய்வதற்கு ஏற்பாடு செய்தனர்.

சென்னையில் இருந்து ரயில் புறப்படும் முன்பாக அங்கு டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டதால், பாதி தொகையான 52 ஆயிரத்து 480 ரூபாய் திருப்பி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் திருச்சியில் இருந்து ரயில் புறப்பட்டு விட்டதால் இந்த முழு தொகையையும் திருப்பி தரப்படவில்லை.

Views: - 0

0

0