மருத்துவர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் தந்தை, மகன் உயிரிழப்பு: பொதுமக்கள் குற்றச்சாட்டு

15 May 2021, 6:33 pm
Quick Share

வேலூர்: காட்பாடி அருகே மருத்துவர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் தந்தை மகன் உயிரிழப்பு என பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே முத்தரசி குப்பம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (55) அவரது மகன் சம்பத் (30) ஆகிய இருவரும் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர்களுக்கு மருத்துவர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை தந்தை மகன் இருவரும் ஊசி போடப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையிலேயே இருவருமே உயிரிழந்தனர்.இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உயிரிழந்த பெரியசாமி அப்பகுதியில் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராகவும், மகன் சம்பத் தனியார் கடை ஒன்றில் வேலை செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Views: - 40

0

0